சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்கள் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கு அதனை வழங்குவதற்கு தவறியமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் அமைச்சுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்காலிகமாக மூடப்படவுள்ள குறித்த காலப்பகுதியில் புனரமைப்பு பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *