பாகிஸ்தானின் கனவை சுக்கு நூறாக உடைத்த மேத்யூ வேட்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொகமது ரிஷ்வான் 52 பந்தில் 67 ஓட்டங்களும், பாகர் ஜமான் 32 பந்தில் 55 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவரில் 38 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர் ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி வெளியேற, இவரைத் தொடர்ந்து வந்த மிட்சல் மார்ஷ் 22 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், டேவிட் வார்னர் 30 பந்தில் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வெளியேற, ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

ஆனால், கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் மற்றும் மார் ஸ்டாய்னிஸ் ஜோடி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் ஆஸ்திரேலியா அணி இறுதியாக 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 19-வது ஓவரின் கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டு மேத்யூ வேட் ஆட்டத்தின் முடிவையே மாற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. கடைசி வரை அவுட் ஆகாமல் மேத்யூ வேட் 17 பந்தில் 41 ஓட்டங்களும், 30 பந்தில் 40 ஓட்டங்கள் எடுத்து அசத்தினர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சதாப் கான் 4 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும் லீக் போட்டிகளில் 5 போட்டியிலும் வெற்றி பெற்று கெத்தாக அரையிறுதியிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, அரையிறுதி போட்டியில் பரிதாபமாக வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *