பட்ஜட் 2022 முழு விபரங்கள்!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் 8.5 பில்லியன் நிதி அரசாங்கத்தின் திறைசேரிக்கு மாற்றப்படும்.

துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை.

மது வரியை அதிகரிப்பதால் 25 வீத வருமானத்தை பெற முடியும்
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிப்பு.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

கிராமப் புறங்களில் பௌத்த விகாரைகள், மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா நிவாரணம்.

அதிபர், ஆசிாியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நிவாரணப் பொதி 24 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழில் ஊக்குவிப்பு
பொதுமக்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு.

வனஜீவராசிகள் பாதுகாப்புக்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு.

இலங்கையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 05 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு.

பாடசாலைகள் மூடப்பட்டமையினால் வருமானத்தை இழந்த பேருந்து, வேன் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

நகர்ப்புற வீடமைப்பு அபிவிருத்திக்கு 2,000 மில்லியன் மற்றும் கிராமப்புற வீடமைப்பு அபிவிருத்திக்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் ஊடாக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

2 இலட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சகல ஆண்டிலும் செல்வார்கள், கொவிட் நெருக்கடி காரணமாக அடுத்த ஆண்டில் 1,300,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்ட, சிறு பயிர்ச் செய்கைகளின் விளைச்சலை அதிகாிப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் விவசாய தொழில்நுட்பத்தை துாிதமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

2022 ஆம் ஆண்டுக்கு தேவையான சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.

நாட்டில் 80 வீதமானோர் விவசாயத்துறை, விவசாயத்துறைசார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். விவசாயத்துறையில் உள்ள சவால்களை நாம் அடையாளங்கண்டுள்ளோம்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவுகளைப் பொறுத்தவரையில், அவை பொதுமக்களுக்கான முதலீடுகள் என்றே கருதுகிறேன்.

அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.

புதிய வியாபாரத்தை பதிவு செய்வதற்கு அறவிடப்படும் கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு அறவிடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கையை ஐந்து மகா கொள்கைளைக் கொண்ட நாடாக மாற்றுவோம்.

விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஆடை உற்பத்தியில் பத்திக் ஆடை உற்பத்திகளை அதிகாித்து அதன் ஊடாக வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம்.

ஆடைத் தொழிற்சாலைகளினால் 4 பில்லியன் வருமானம் பெற்றாலும் புடவைகளை பெற்றுக்கொள்ள 2 பில்லியன் செலவு செய்வதால் தேவையான புடவைகளை நாட்டுக்குள் உற்பத்தி செய்ய நடவடிக்கை
புதிய காப்புறுதி திட்டங்களை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களை பாதுகாப்பதற்கு முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க முன்மொழிவு.

தொலைபேசி, இணையத் தடைகள் குறித்த முறைப்பாடுகள் குறைத்துள்ளன.
சகல பகுதிக்கும் கிடைக்கும் விதமாக வேகமான இணைய தொடர்பாடலை உருவாக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும். (ஜி-5) தொழிநுட்பம் சகல பகுதிகளுக்கும்.

அரச துறைக்கு 2022 முதல் புதிய சம்பள திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் வேதன அதிகரிப்புகள் உறுதி செய்யப்படும்.

சமுர்த்தி வங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தவும் யோசனை.

அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது.

வரிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரி திணைக்களத்தை பலப்படுத்துமாறும் யோசனை முன்வைக்கின்றோம்.

சமுதாய நலன்புாிகளுக்காக மக்களை தொிவு செய்யும் போது விஞ்ஞானபூர்வமாமான திட்டங்கள் அவசியமாகும்.

அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும் தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கு சூாிய சக்தியை உபயோகிப்பதற்கும் பாிந்துரைகளை முன்வைக்கிறேன்.

அரச நிறுவனங்களில் தொலைபேசி கட்டணங்களை குறைப்பதற்கு சூாிய சக்தியை உபயோகிப்பதற்கு பாிந்துரைகளை முன்வைக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான வயது எல்லை 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தவிர, இரண்டு வருடங்களுக்கு புதிய கட்டட நிர்மாணங்கள் எதுவும் இல்லை.

சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், துறைமுக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு நாணய இருப்பை அதிகாித்துக்கொள்வதற்கு நாம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். சந்தைப் பொருட்களை அதிகாிக்க வேண்டிய தேவை உள்ளது.

கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.

2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்தின் அதிக செலவு – கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது.

உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.

வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும்.

வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்
ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீட்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.

கொவிட் சவால்களை வெற்றிகொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டை நீண்ட காலம் முடக்க நேர்ந்தது.

மூன்றாம் அலையை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேர்ந்தது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.

500 பில்லியனுக்கும் அதிகமான பில்லியன் ரூபா வருமானம் இழந்த நாடாக உள்ளோம். மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றம் கொண்டுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றில் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பூகோள சவால்கள் என சகல விதத்திலும் நாம் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *