கொவிட் அதிகரிப்பால் ஜேர்மனியில் அவசர நிலை பிரகடனம்!

ஜேர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு தினசரி கோவிட் பாதிப்பு எண்னிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, மிக அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது நேற்று (புதன்கிழமை) பதிவானது.

ஜேர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) அளித்த தகவல்களின்படி, முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 37,120 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.

இதுவே மிக அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை என பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 39,676 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் ஜேர்மனியின் தொற்று விகிதம் 100,000 பேரில் 232.1 பேர் என உயர்ந்துள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளின் நிலைமை மோசமாக உள்ளது. பல மருத்துவமனைகள் சமீப நாட்களில் அவர்கள் மீண்டும் தங்கள் வரம்பின் எல்லையில் வேலை செய்வதாகவும், ICU-களில் கோவிட்-19 நோயாளிகள் நிரம்பியுள்ளதாகவும், தற்போது புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பெர்லின் சாரிட் மருத்துவமனையின் வைராலஜி தலைவர் Christian Drosten “நமக்கு இப்போது உண்மையான அவசரநிலை ஏற்பட்டுள்ளது, நாம் இப்போதே ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதன்படி, நாட்டில் தடுப்பூசிகள் விரைவாக முடுக்கிவிடப்படாவிட்டால் மற்றொரு பொது முடக்கம் தேவைப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், ஊரடங்கை விதிக்க விரும்பவில்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவரும் நிலையில், அதற்கு பதிலாக தடுப்பூசி போடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *