மாத செலவு 2500 ரூபா போதும் என தெரிவித்த பந்துலவின் தேனீர் செலவு 2 இலட்சம் ரூபா!

மாத செலவுக்கு 2500 ரூபா போதும் என தெரிவித்த பந்துல குணவர்தனவின் தேநீர்ச்செலவு மட்டும் 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என்று துஷார தெரிவித்துள்ளார்.

தனது அண்ணன் என்றும் பாராது மஹிந்த ராஜபக்ஷ செய்த தவறு களை பொது மேடையில் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி கோட்டாப பய ராஜபக்ஷவை பாராட்டுகின்றேன்.

அத்துடன் ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்துக்கு 2500 ரூபா போது மெனக்கூறியிருந்த அமைச்சரின் தேநீர்ச்செலவு மட்டும் 2இலட் சத்து 90 ஆயிரம் ரூபாவாகும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்ட மூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே இவ்வாறு குறிப் பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் பொது மேடை ஒன்றில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து செல்வதில்லை எனவும் தனது மனை வியைக்கூட சொந்த செலவிலேயே அழைத்துச் சென்றதாகவும் கூறியி ருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதனைப் போன்றே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே ஆர். ஜெயவர்த்தனஇ ஆர். பிரேமதாச ஆகி யோரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள், உறவி னர்களை அழைத்து செல்வதில்லை. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ தான் ஜனாதிபதியாக இருக்கையில் வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து சென்றார். இவ்வாறான தவறுகளை செய்தது தனது அண்ணன் என்ற போதும் அதனை பொது மேடையி லேயே தவறு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை நாம் பாராட்டுகின்றோம்.

ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்திற்கு 2500 ரூபா போதுமெனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த னவின் தேநீர் செலவு மட்டும் 290000 ரூபா. அமைச்சர் பந்துல குணவர் தன முதலில் தனது அலுவலகத்தை சதொச கட்டிடத்தின் மேல் மாடியில் அமைத்திருந்தார். பின்னர் அதில் திருப்தி அடையாமல் அந்த அலுவ லகத்தை காலி வீதிக்கு மாற்றினார். அந்த கட்டிடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா. ஆனால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர் தன, ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத் திற்கு 2500 ரூபா போதுமெனக் கூறி யிருந்தார். ஆனால் அவரின் அலுவலக கட்டிடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா அது மட்டுமன்றி அவரின் தேநீர்ச்செலவு மட்டும் 290000 ரூபாவாகும். இது நியாயமா என கேட்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *