அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல ஜனாதிபதி தெரிவிப்பு!
அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
, அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாம் ஆரம்பத்தில் 65,000 பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கியதாகவும், தகுதியானவர்களின் விவரக்குறிப்பை பார்க்கும் போது, பெரும்பான்மையானவர்கள் அழகியல் பிரிவில் படித்தவர்கள் அல்லது வெளியக பட்டதாரிகளாகவுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறான நபர்கள் அரச துறைக்கு நன்மை தருவார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அனைத்து அரசாங்கங்களும் அரச துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், அது அரச சேவையின் வினைத்திறனுக்காகவும் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்குமா என்றும் ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.