விபத்தில் பலியான கோடீஸ்வரர் மொபைல் பயன்படுத்தியதால் நிகழ்ந்த பரிதாபம்!

கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் ஒருவர் விபத்தில் கொல்லப்பட்ட நிலையில், அவர் மீது மோதிய ட்ரக்கின் சாரதி வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தியதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

கால்கரியைச் சேர்ந்த கோடீஸ்வரரான Ron Carey (80), 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 3ஆம் திகதி, லண்டனிலிருந்து பிரைட்டன் நோக்கிச் செல்லும் பழங்கால கார்கள் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அவர் தவறுதலாக நெடுஞ்சாலை ஒன்றிற்கு வந்துவிட்டிருக்கிறார். நெடுஞ்சாலையில் அவரது கார் பயணிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று அவரது காரின் பின்னால் மோதியுள்ளது.

அந்த விபத்தில் Ron சம்பவ இடத்திலேயே பலியாக, அவரது மனைவியான Billi படுகாயமடைந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லண்டன் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவர் பிழைத்துக்கொண்டார்.

இந்நிலையில், ட்ரக்கை செலுத்திவந்த Michael Black (52) என்பவர், தனது நண்பர் ஒருவரை மொபைலில் அழைக்க முயன்று கொண்டிருந்ததாகவும், வெகு நேரம் முயன்றும் அவரது நண்பர் அழைப்பை ஏற்காத வெறுப்பில் இருந்த நிலையில், அவர் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த Ronஉடைய காரை கவனிக்கவில்லை என்றும், அதனாலேயே விபத்து ஏற்பட்டது என்றும் விசாரணை அதிகாரி ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை தொடர்கிறது… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *