இலங்கை ஆசியாவில் மிகவும் வறிய நாடாக மாறுவதை தடுக்க முடியாது!

அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக பதவிக்கும் சுசில் பிரேமஜயந்தவிற்கு பின்னர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான அனுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது. இதனால், தனக்கு அமைச்சர் பதவி வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் செய்யும் எதுவும் மக்களுக்கு தெரியவதில்லை. அமைச்சர்கள் கூறும் விடயங்களில் கூட நம்பிக்கையில்லை. இப்படியான நிலைமையில் மாற்று சக்தி ஆட்சிக்கு வருவதை தவிர்க்க முடியாது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் இருப்பானது நிச்சயமற்றது. சமூகத்தின் இருப்பும் அதனை விட நிச்சயமற்றது. அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது.

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இலங்கை ஆசியாவில் உள்ள மிகவும் வறிய நாடு என்ற நிலைமைக்கு மாறுவதை தடுத்தும் நிறுத்த முடியாது.

தற்போதைய அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லை, நிலைப்பாடுகள் இல்லை, கொள்கைகளும் இல்லை. நிர்வாகம் செய்வதற்கான முறைகளும் இல்லை என்பதுடன் அரசாங்கம் எங்கு போகிறது என்பது எமக்கும் புரியவில்லை, மக்களும் புரியவில்லை எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *