சீனாவின் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி?

இலங்கையில்உபயோகிக்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது என விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், குறித்த சினோபாம் தடுப்பூசியின் மூலம் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு 6 மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஏ.30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில் உலகளாவிய ரீதியில் பரவலடையவில்லை.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அத்தியாவசியமானதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *