ஓய்வு தேவை தோல்விக்குப் பின் பும்ரா தெரிவிப்பு!

சில நேரங்களில் எங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது; கொரோனா பாதுகாப்பு சூழலில் இருப்பது அயர்ச்சியை தருகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்பட்டு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழுந்தது. அந்த இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியது பும்ரா மட்டுமே

போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா “சில நேரங்களில் ஓய்வு தேவைப்படும். அது மிகவும் முக்கியமானதும் கூட. ஆனால் இவையெல்லாம் ஆட்டம் நடக்கும்போது எங்களுக்கு தோன்றுவதில்லை. ஆனால் பல மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான். பிசிசிஐ தங்களால் முடிந்த அளவுக்கு எங்களை வசதியாக வைத்திருக்க முயற்சி எடுக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது” என்றார்.

மேலும் பேசிய அவர் “இதுபோன்ற பெருந்தொற்று காலங்களில் கொரோனா பாதுகாப்பு சூழலில் இருப்பது சரியானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவும் பெரும் சோர்வை உண்டாக்குகிறது. உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை பலராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நேற்றையப் போட்டியில் சில மாறுதல்களை செய்தோம். அதனால் கூடுதலாக சில ரன்கள் வரும் என எதிர்பார்த்தோம்” என்றார் பும்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *