ராஜ்குமாரிடம் பயின்ற 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்கிறார் நடிகர் விஷால்!

விஷால், ஆர்யா நடித்துள்ள எதிரி படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவை தொடங்கும் முன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

அப்பொழுது பேசிய நடிகர் விஷால் (Actor Vishal), இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற இரு எண்ணங்களில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
“புனீத் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு டவுன் டு எர்த் சூப்பர் ஸ்டாரை (Down to Earth Superstar) நான் பார்த்ததில்லை. பல சமூகப் பணிகளைச் செய்து வந்தார்.

புனித் ராஜ்குமாரிடம் இலவசக் கல்வி (Free Education) பெற்று வரும் 1800 மாணவர்களையும் அடுத்த ஆண்டு முதல் கவனித்துக் கொள்வதாக உறுதியளிக்கிறேன் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *