75 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 90 வயது தாத்தா!

இங்கிலாந்தில் 90 வயது முதியவர் ஒருவர் ஒரே கம்பெனியில் 75 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் வசிக்கும் பிரையன் வெப் (Bryan Webb) என்பவர் 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேலை தேடி இளம் வயதில் வேலைத்தேடி வோக்ஸ்கால் (Vauxhall) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் இவருக்கு தொழில் பழகுநராக பணியில் சேர்கிறார். தொடக்கத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய பிரையன், படிப்படியாக உயர்ந்து பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அதன் பின்னர் 34 ஆண்டுகாலம் வாரண்டி அட்மினிஸ்ட்ரேட்டராக பணியாற்ற ஓய்வுக்கான நேரம் நெருங்கியது என கம்பெனி தெரிவிக்க இன்னும் இரண்டு காலம் வேலை செய்கிறேன் என கூறி வந்துள்ளார்.

அப்படியே, 25 ஆண்டுகள் வேலை செய்ய தற்போது 90 வயதை எட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உழைப்பு என்னை இளமையுடன் வைத்திருக்க உதவியது.

அதனால், தான் நான் ஓய்வு எடுக்க வில்லை. ஆரம்பத்தில் இந்த வேலை எனக்கு கடினமாக இருந்தது. பழக பழக எளிதான ஒன்றாகி விட்டது. காலங்கள் மாறின, கார்களும் மாறின ஆனாலும் எனது பணியை தொடர்ந்து செய்தேன்.

தற்போது அதற்கு ஓய்வு கொடுத்துள்ளேன். இனி எதிர் வரும் காலங்களில் என் வேலையை மிஸ் செய்தாலும் ஒரு கப் தேநீரும், மதிய வேளையில் ஒரு குட்டி தூக்கத்தையும் எதிர்நோக்கி உள்ளேன் என உருக்கமாக பிரையன் தெரிவித்து இருக்கிறார்.

சுமார் 75 ஆண்டு காலம் பணியாற்றிய அவருக்கு கம்பெனி சார்பில் நினைவு பரிசாக ஸ்பேனர் ஒன்றையும், வாழ்நாள் ஊழியருக்கான விருதையும் கொடுத்து, அவர் பெயர் பொறித்த உலோக பட்டயம் கொடுக்கப்பட்டு கவுரவித்துள்ளது அந்நிறுவனம்.இவரின் இந்த உழைப்புக்கு இணையத்தில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *