சஜித் அணியின் முக்கிய பிரபலங்கள் பதவி விலக முடிவு?

ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இத்தகவலை கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த வருடம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் அபேட்சகர்களாக போட்டியிடுவதற்காக இவர்கள் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க சரத்பொன்சேகா (மேல் மாகாணம்)மனூஷ (தென் மாகாணம்) தலதா (சப்ரகமுவ மாகாணம்) மயன்த (மத்திய மாகாணம்) ஹரிசன் (வடமத்திய மாகாணம்) நளின் பண்டார (வட மேல் மாகாணம்) ஆகியோரே இவ்வாறு தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *