தேர்வு குழுவினரால் தூக்கி எறிந்த ஆசிப் அலிக்கு மறுவாழ்வு கொடுத்த இம்ரான் கான்!

பாகிஸ்தான் அணியானது மேட்டுக்குடி வாதமும் , வர்க்கப்பேதமும் நிறைந்த ஒரு அணி.

எத்தனையோ ஏழை இளைஞர்களான சிறந்த வீரர்கள் ,அந்த அணியின் தேர்வுக்குழுவால் தூக்கி எறிந்து , காணாமல் செய்யப்பட்டுமுள்ளனர்.

பாகிஸ்தான் தேர்வுக்குழு அப்படியான வர்க்கப்பேதத்தை தான் , ஆஷிப் அலி மீதும் பிரயோகித்து அவரையும் தள்ளி வைத்திருந்தது.

சில வருடங்கள் முன்னர் ஆஷிப் அலியின் சிறு வயது குழந்தையொன்று , புற்று நோயினால் மரணித்தது.
அப்போது அந்த கவலையிலேயிருந்த ஆஷிப் அலி விளையாட்டிலே சரியாக கவனம் செலுத்தவில்லை.
அதாவது மனக்கவலை அவரை வதைத்த காலம்.

இந்த நேரத்திலேயே , பாகிஸ்தான் தேர்வுக்குழு அவரை திறமையற்றவர் என ஒதுக்கத்தொடங்கியது.

ஆனால் , அந்நாட்டின் பிரதமரும் , முன்னாள் கிரிக்கட் வீரருமான இம்ரான்கான் , ஆஷிப் அலி திறமையை சரியாக இனம் கண்டார்.
அதே நேரம் அவரது விரக்தி மன நிலையையும் சரியாக எடைப்போட்டார்.

ஆதலால் தான் ஆஷிப் அலி மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.
ஆஷிப் அலிக்கு கிரிக்கட்டிலே ஒரு மறு வாழ்வு !

நாட்டிற்கும் சரி கிரிக்கட்டிற்கும் சரி ,  தானொரு சிறந்த தலைவரென்பதை ,  இம்ரான் கான் மீண்டுமொரு முறை நிரூபித்த தருணம்.

ஆஷிப் அலியும் இம்ரான் கானின் நம்பிக்கையை இது வரை வீணாக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆஷிபின் இந்த வெறியாட்டத்தின் போது , அவரது நெஞ்சிலே குடியிருக்கும் சக்தியாக இம்ரான் கானும் , அவரது மரணித்த குழந்தையுமே இருப்பார்கள் எனலாம்.

அந்த நெருப்பு நெஞ்சிலே எரிகின்ற வரையும் , இவரும் பிரகாசிப்பார் .

ஒரு மனிதனை உச்சம் தொட வைப்பது திறமை மட்டுமல்ல.
வெஞ்சம் , வைராக்கியம் , புறக்கணிப்பு , கேலிகள் , அவமானங்கள் எல்லாமுமே தான்.
அதற்கு இன்றைய எடுத்துக்காட்டு ஆஷிப் அலி !

12 பந்துக்கு 24 தேவையென்றதை , 06 பந்தோடு முடித்து , நீண்ட நாளின் பின்னர் கிரிக்கட்டை ரசிக்கவும் , எழுதவும் வைத்த வீரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *