சீனாவில் தடுப்புக்காவலில் உள்ள சிறுபான்மை மக்களின் உடல் உறுப்புகள் விற்பனை!

சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உய்குர் உட்பட சிறுபான்மையினர் மக்களின் உறுப்புகளை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம்.

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர்கள் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக சீன அரசாங்கம் செய்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உய்குர் உட்பட சிறுபான்மை மக்களின் உறுப்புகளை கருப்பு சந்தையில் விற்பனை செய்வதால் சீன நிர்வாகம் பல பில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டுவதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் சமீப நாட்களில் வெளியான அறிக்கைகளில், ஆரோக்கியமான கல்லீரலுக்கு கருப்பு சந்தையில் 160,000 டொலர் விலையிடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் சீனா நிர்வாகம் ஆண்டுக்கு 1 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உய்குர் உட்பட சிறுபான்மை மக்களில் ரத்த மாதிரிகளை வலுக்கட்டாயமாக பெற்றுள்ளதும், உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளனவா என்பதை சோதிக்க உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த தரவுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், தேவையானோருக்கு உறுப்புகள் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டு வந்ததும் அம்பலமானது. மேலும், சீனாவில் தடுப்புக்காவல் அமைக்கப்பட்டுள்ள பகுதியின் மிக அருகாமையிலே இதற்கான மருத்துவமனைகளும் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *