இலங்கையின் பண வீக்கம் அதிகரிக்கும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி உயர்வால் எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் 6% முதல் 7% வரை இருந்த பணவீக்கம் வரும் மாதங்களில் 8.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இருப்பினும், 2022 முதல் காலாண்டில், பணவீக்க விகிதம் 4% -6% ஆக குறையும், என்றார்.

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் இந்த தகவலை தமக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *