இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி!

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெதும் நிசங்க அதிகபட்சமாக 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

பந்து வீச்சில் D Pretorius, T Shamsi ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் பெறவிருந்த நிலையில் டேவிட் மில்லர் 2 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் அணித்தலைவர் Temba Bavuma 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில், வனிந்து ஹசரங்க ஹெட்-ரிக் விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *