ரஷ்யாவில்  இராணுவ பயிற்சியில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா!

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ரஷ்யாவில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவுக்கு  விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார்.

2020 ஆம் ஆண்டு இலங்கைக்கான தனது விஜயத்தின் போது ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ரஷ்ய ரஷ்ய குடியரசின் நடவடிக்கைகளின் பிரதானியான ஜெனரல் ஒலெக் சல்யுகோவ்,   ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டங்களை ஊக்குவித்தல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இயந்திரவியல் மற்றும் பொறியியல் அறிவைப் பரிமாறிக்கொள்வது உட்பட பரஸ்பரம் ஆர்வமுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *