10 ஆயிரம் பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த பெண் 100 வயதில் நீதிமன்ற விசாரணையில்!

சித்திரவதை முகாம் ஒன்றில் செயலராக பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு இப்போது கிட்டத்தட்ட 100 வயதாகும் நிலையில், அவர் சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்.

அதற்குக் காரணம், அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்தபோது அவரது வயது 18 மட்டுமே என்பதுதான்!

ஜேர்மானியரான Irmgard Furchner (96), ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து நாட்டிலிருந்த சித்திரவதை முகாம் ஒன்றில் 1943க்கும் 1945க்கும் இடையில் பொறுப்பாளராக இருந்த இராணுவ தளபதி Paul Werner Hoppe என்பவரின் செயலராக பணியாற்றினார்.

அந்த தளபதி, கைதிகளை ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு கொலை செய்யப்படுவதற்காக அனுப்புவது குறித்த தகவல்களை Irmgardதான் குறிப்பெடுத்திருக்கவேண்டும், தட்டச்சு செய்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

அந்த சித்திரவதை முகாம் சீராக இயங்குவதற்கும், முகாமிலிருந்தவர்கள் கொல்லப்படுவதற்கும் Irmgard உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Irmgard செயலராக இருந்த காலகட்டத்தில் மட்டும் 10,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சித்திரவதை முகாமில் கழுத்தில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட கருவி ஒன்றின் உதவியால் குத்தப்பட்டும், சிறிய அறைகளில் அடைக்கப்பட்டு, விஷவாயு செலுத்தப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள்.

விஷவாயு செலுத்தப்பட்டதும், அதன் கொடூரம் தாங்க இயலாமல் தங்களைத் தாங்களே பலமாக கீறிக்கொள்வதுடன் தலைமுடியையும் பிய்த்துக்கொள்வார்களாம் கைதிகள்.

இந்த விடயங்கள் முழுவதும் முழு விவரமாக Irmgardக்கு தெரியும்.

ஆகவே, அத்தனை பேரின் கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக Irmgard மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *