நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் (வயது 70) சென்னையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *