அடுத்த வாரம் முதல் IPhone, உள்ளிட்ட 50 போன்களில் வாட்ஸ் அப் இயங்காது!

உலகில் மிகவும் பிரபலமான செயலிகளில் வாட்ஸ் ஆப் செயலியும் ஒன்று.

இந்நிலையில், இன்னும் ஐந்து நாட்களில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் இந்த வாட்ஸ் அப் செயலி இயங்காது.

பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் செயலி, வரும் நவம்பர் 1-ஆம் திகதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள பழைய போன்களுக்கு தன்னுடைய வாட்ஸ் அப் செயலியை நிறுத்தவுள்ளது.

இதனால் நீங்கள் நிச்சயமாக உங்கள் போனை புதுபிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம், அல்லது அதை புதுபிக்க முடியாது என்றால் நீங்கள் நிச்சயமாக தற்போது உள்ள புதிய மொடல் போன்களை வாங்கியே ஆக வேண்டும்.

எந்த வகை போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது?

வாட்ஸ் அப் நிறுவனம் அடுத்து வாரத்தில் இருந்து, சில ஸ்மார்ட்போன் மொடல்களில் தங்களுடைய சப்போர்ட் சேவையை நிறுத்தவுள்ளது. இதில் ஆப்பிள் போன் முதல் ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளன.

Apple(மொடல்கள்)

iPhone SE (2016), 6S மற்றும் 6S Plus. இந்த வகை மொடல்கள் iOS 9 உடன் தொடங்கப்பட்டன. ஆனால் வாட்ஸ் அப்பை சேவையை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் iOS 15-வில் நீங்கள் பெறலாம்.

அதே சமயம் iOS 10-ல் நீங்கள் வாட்ஸ் அப்பை புதுபிக்கவும் முடியாது. மேம்படுத்தவும் முடியாது. இந்த வகை போன்கள், கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து iPhone 4S-ஐ உள்ளடக்கியது.

Samsung(மொடல்கள்)

Samsung Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy SII, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core மற்றும் Galaxy Ace 2 ஆகியோ போன்களில் வேலை செய்யாது.

LG(மொடல்கள்)

LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD மற்றும் 4X HD, மற்றும் Optimus F3Q.

ZTE(மொடல்கள்)

ZTE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 மற்றும் Grand Memo.

Huawei(மொடல்கள்)

Huawei Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL, Ascend P1 S மற்றும் Ascend D2.

Sony

Sony Xperia Miro, Sony Xperia Neo L, Xperia Arc S.

இதைத் தவிர மற்ற போன் வகை மொடல்கள்

Alcatel One Touch Evo 7, Archos 53 Platinum, HTC Desire 500, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820, UMi X2, Faea F1 மற்றும் THL W8.

இந்த போன்கள் உங்களிடம் இருந்தால் பழைய வாட்ஸ் அப் மெசேஜ்களை அப்படியே புது போன்களுக்கு பெற வேண்டும் என்றால்?

வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படவுள்ள இந்த 50-க்கும் மேற்பட்ட போன்களை உலகில், மில்லியன் கணக்கான மக்கள் தற்போது வரை பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால், அவர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் சேட், அதில் உள்ள அனைத்தும் தங்களுக்கு வேண்டும் என்றால், அதற்கு ஒரு வழி உள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் உங்கள் போன் (iOS அல்லது Android)-ஆக இருந்தால் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் வரலாற்றை Google Drive அல்லது iCloud-வுக்கு மூவ் செய்யலாம்.

இதைத் தவிர நீங்கள் உங்கள் வாட்ஸ் ஆப்பில், கூகுள் அக்கவுண்ட்டின் பேக் அப் ஆப்சன் கொடுத்து எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *