இலங்கையில் பக்கவாதம் நோயால் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் பாதிப்பு!

பக்கவாதம் நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் ஊனமுற்றோராக மாறுதாக தேசிய பக்கவாத நோய் தொடர்பான சங்கம் தெரிவித்துள்ளது.

பக்கவாத நோய் அறிகுறிகளுடன் கூடிய நபர்களை உடனடியாக வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதன் மூலம் அவர்கள் ஊனமுற்ற நிலைமைக்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என அந்த சங்கத்தின் தலைவரான நரம்பியல் நோய்கள் தொடர்பான நிபுணர் மருத்துவர் ஹர்ச குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் பக்கவாதம் காரணமாக சுமார் 60 நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறது. இவர்களில் சுமார் 4 ஆயிரம் நோயாளர்கள் மரணமடைகின்றனர்.

இதனைத் தவிர சுமார் 20 ஆயிரம் நோயாளிகள் ஊனமுற்றோராக மாறுகின்றனர். இந்த நிலைமையைக் குறைக்கப் பக்கவாத நோய் அறிகுறிகளை உடனடியாக அறிந்துகொள்ளுமாறு மக்களிடம் கோருகிறோம்.

நோய் அறிகுறிகளை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். முகத்தில் ஏற்படும் ஊனம், குறிப்பாக வாய் கோணலாக மாறுவது. கைகளை உயர்த்த முடியாமல் போவது, வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஏற்படும் பலவீனம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அந்த நபரை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பாக சீ.டி.சீ. ஸ்கேன் இயந்திரம் இருக்கும் வைத்தியசாலைக்கே நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மருத்துவர் ஹர்ச குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பக்கவாத நோய்க்கான பிரதான காரணம் தவறான உணவுப் பழக்கங்கள் எனச் சுகாதார அமைச்சின் தொற்று நோய் அல்லாத நோய்கள் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை வட்டம், உப்பு, எண்ணெய், சீனி போன்றவற்றை அதிகமாக உணவுக்கு எடுப்பது. குறைவான உடற்பயிற்சி, மதுபானம் அல்லது போதைப் பொருள் பாவனை, புதைத்தல் என்பதுடன் காற்று மாசடைதல் என்பன இதற்கு காரணமாக அமைப்பும் பிரதான விடயங்களாகக் காண்கின்றோம்.

நாங்கள் உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறோம், இதனால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறு இவை அனைத்துக்கும் அடிப்படை காரணம் உணவுப் பழக்க வழக்கமாகும்.

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 வீதமான மரணங்கள் தொற்று நோய் அல்லாத நோய்கள் காரணமாக ஏற்படுகின்றன எனவும் சாந்தி குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *