இந்த மர்ம ஏரிக்குள் போனால் யாரும் உயிருடன் திரும்ப முடியாதாம்!

உலகில் பல மர்மமான இடங்களில் ஒன்றுதான் உள்ள நவாங் யங் ஏரி. இது இந்தியா அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா- மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது இந்த ஏரியின் மீது பறந்த ஒரு விமானம் ஏரிக்குள் புகுந்து விமானியுடன் காணாமலேயே போய் விட்டதாம்.

இது வரை அந்த விமானம் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லையாம். ஏன் இந்த ஏரிக்குள் சென்று யாரும் பார்க்கவில்லை என நிங்கள் நினைக்கலாம் அங்கு தான் ட்வீஸ்டே இருக்கிறது.

இந்த ஏரிக்குள் சென்ற யாரும் திரும்பியதே இல்லையாம், அதனால் தான் இந்த ஏரிக்கு திரும்ப வரமுடியாத ஏரி என்ற பெயரும் இருக்கிறது. இந்த ஏரியின் வழியாக கடந்து செல்லபவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லையாம்.

இப்படியாக சென்ற ஒரு கூட்டமே காணாமல் போய்விட்டதாம். இதே போல சென்றவர்கள் திரும்ப வராமல் போவதற்காக காரணமும் இருக்கிறது. ஒரு முறை இந்த கிரமத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த ஏரியில் மிகப்பெரிய மீன் ஒன்றை பீடித்துள்ளார்.

அதை வெட்டி அவர் இந்த கிராமத்திற்கே விருந்து வைத்துள்ளார். ஆனால் அந்த விருந்திற்கு ஒர பாட்டியையும பேத்தியையும் மட்டும் அவர் அழைக்காமல் இருந்துள்ளாராம். இதனால் அந்த பாட்டி கோபப்பட்டு இதை கேட்டுள்ளார்.

பாட்டியின் கோபத்தை பார்த்து கோபமடைந்த கிராம மக்கள் அந்த பாட்டியையும் பேத்தியையும் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தார்களாம்.

அதனால் அவமானமடைந்த பாட்டியும் பேத்தியும் குளத்தில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் தற்கொலை செய்த மறுநாள் அந்த ஏரிக்குள் ஒட்டு மொத்த கிராமமே முழ்கியதால் அங்கிருந்த மக்கள் எல்லோரும் இறந்துவிட்டார்களாம்.

அன்று முதல் அந்த ஏரிக்குள் யார் சென்றாலும் அவர்கள் திரும்ப வருவதேயில்லையாம்.

இதுதான் மனிதர்கள் அந்த ஏரிக்குள் காணாமல் போவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

பல விஞ்ஞானிகள் இந்த ஏரியில் ஏன் மக்கள் காணாமல் போகிறார்கள் என கண்டுபிடிக்க சில முயற்சிகளை செய்து பார்த்தனர் ஆனால் இன்றுவரை அதற்கான காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியவேயில்லை. அதனால் இன்று வரை அந்த ஏரி மர்மமான ஏரியாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *