துபாயில் உள்ள பேய்களின் நகரம்!

ஷார்ஜாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் தான் அல் மதாம். இந்த நகரத்தில் பேய்களின் நகரம் என அழைக்ப்படுகிறது. சுமார் 1970-ல் இருந்து 1980-களில் இந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை கட்டிக்கொண்டு குடியேறினார்கள்.

அந்த வீடுகள் ஹால், விருந்தினர்கள் அறை, காற்றோட்டமுள்ள படுக்கையறை என வசதியான வீடுகளை அரசு அனுமதியுடன் கட்டியுள்ளனர். ஆனால், இதெல்லாம் கொஞ்ச காலம் தான்.

அதன்பின்னர் வீட்டை காலி செய்து அனைவரும் கிளம்பி விட்டனர். அதற்கு காரணம், இங்கு பேய்கள் இருப்பதாக வெளியேறியதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால், சிலர் அருகில் இருக்கும் பாலைவனம் டன் கணக்கில் மணலை கொட்டியது தான் காரணம் என கூறுகிறார்கள். ஆனால், எது உண்மை என தெரியவில்லை, வீடுகளுக்கு உள்ளே வெளியேயும் மணல் குவிந்து கிடப்பது மட்டுமே உண்மை.

இந்நிலையில், ஷ்லோய்ம் சியோன்ஸ் என்ற அமெரிக்க வாழ் யூதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரகம் வந்திருக்கிறார். இதையடுத்து, புர்ஜ் கலீஃபா, கடற்கரைகள், பூங்காக்கள் என அமீரகத்தின் பிரபல சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் அவரை ஈர்த்தது.

ஆனால், பேய்களின் நகரம் என்றழைக்கப்படும் Ghost Town தான். இவரை வெகுவாக கவர்ந்துள்ளது. உடனே கேமராவை தூக்கிக்கொண்டு தனியாளாக காரில் கிளம்பி சென்றுள்ளார்.

இந்த பேய்களின் நகரம் எங்கு இருக்கிறது என கூகுள் மேப்பில் தேடி சென்றுள்ளார். ஆனால் அவரால் ஒரு கட்டத்திற்கு மேல், பயணிக்கமுடியாமல் போயுள்ளது. பாலைவனத்தில் வண்டி ஓட்டி செல்லும் அளவுக்கு அவரிடம் போதிய வசதிகள் இல்லை.

நடந்து செல்லாம் என நினைத்தால், ஷ்லோய்ம்க்கு அமீரகத்தின் உக்கிரமான வெப்பநிலையைக் கண்டு பயம். என்ன செய்யலாம் என காத்திருந்த நிலையில், அவரை நோக்கி ஒரு வாகனம் வந்துள்ளது.

அப்போது உதவிக்கு உள்ளூர் இளைஞரான் அல் கட்பி உதவி செய்துள்ளார். அவரின் இடத்திற்கு அழைத்து சென்று, அமீர பாரம்பரிய உணவுகளை கொடுத்துள்ளனர். துமட்டுமல்லாமல் அராபிக் ஔத் (Arabic oud) எனப்படும் வாசனைப்பொருளை கட்பி, ஷ்லோய்ம்க்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புதைந்துபோன நகரத்திற்கு ஷ்லோய்மை அழைத்துச் சென்றிருக்கிறார் கட்பி. இருவரும் தங்களது போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டிருகின்றனர்.

தற்போது இருவரும் நண்பர்களாகி உள்ளனர். மேலும், ஷ்லோய்ம் ஒரு யூடியூப் பிரபலம் ஆவார். னது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய ஷ்லோய்ம் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதன்பின்னர், ஷ்லோய்ம்க்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்த அல் கட்பியை அமீரகத்தின் துணைப் பிரதமரும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Saif bin Zayed Al Nahyan) தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *