சவுதி முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார் புலனாய்வு அதிகாரி பரபரப்பு தகவல்!

மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்தநிலையில் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். நேர்காணலில் அவர் கூறியதாவது:

சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷியாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார். அந்த நேரத்தில், இளவரசர் முகமது பின் சல்மான் அரசில் எந்த மூத்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னரை கொல்ல நினைத்தார். இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *