சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு இன்னும் 2 மாதங்களுக்கு நீடிக்கும்!

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று (27) விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிமெந்து இறக்குமதியாளர்கள் கூறியதாவது:

சீமெந்து தட்டுப்பாட்டை இரண்டு நாட்களில் நிறுத்த முடியாது. எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகும். சிமென்ட் தட்டுப்பாட்டுக்கு டொலர் பிரச்னை தான் காரணம். அதனால் விலையில் சிறிது உயர்வு இருக்கலாம்.”

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீமெந்து விலை 1,098 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஆனால், வர்த்தக நிலையங்களுக்கு சரியாக வரவில்லை என்றும், பல்வேறு விலைகளில் கையிருப்பு பெறப்படுவதாகவும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் கட்டுமான தொழிலாளர்கள், சிமெந்து கற்கள், பூந்தொட்டிகள், தோட்ட அலங்காரப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் வருமான இழப்பு ஏற்பட்டு பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீமெந்து இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவை இன்று (27) பிற்பகல் சந்தித்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் கூறுகையில் “இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அடுத்த மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு தேவையான அளவு சிமெந்தை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *