மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என பெயர் வைத்த தந்தை!

இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ என்பவர் தனது மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என பெயர் வைத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்காக பல இணையதளத்தில் தேடியும், பழைய புத்தகங்களை பார்த்தும் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்கின்றனர்.

அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ – ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு ஆங்கில அகர வரிசை எழுத்துகளான ABCDEF GHIJK Zuzu என வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுவனை பள்ளியில் அனைவரும் கேலி செய்துள்ளனர். இது குறித்து அந்த சிறுவன் தந்தையிடம் முறையிட்டுள்ளார், அப்போது அவனது தந்தை கூறுகையில், இது தான் உன்னுடைய உண்மையான பெயர்.

இதில் Zuzu என்பது உங்க அம்மா மற்றும் அப்பா வின் முதல் எழுத்து என்றும், உனக்கு தம்பி அல்லது தங்கச்சி பிறந்தால் NOPQ RSTUV என்று தான் பெயர் வைக்க போகிறோம் என்று கூறி அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *