இந்தியர்களின் தூக்கத்தை கெடுத்த யார் இந்த ஷாஹீன் அப்ரிடி?

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி முதல்முறை தோல்வி கண்டுள்ளது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் வெல்ல அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸாமை தாண்டி இருவர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திய அணியின் தூண்களாக கருதப்பட்ட, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை அவுட் ஆக்கிய ஷஹென்ஷா அப்ரிடி என அழைக்கப்படும் ஷாஹீன் ஷா அப்ரிடி அதில் ஒருவர்

ஷாஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான அஃப்ரிடிகளில் ஒருவர் அல்ல. இருப்பினும், நேற்றைய போட்டியின் மூலம் பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவிலும் ஸ்டாராக உயர்ந்துள்ளார். அவர் எடுத்த விக்கெட்களால் இந்தியாவின் வெற்றிக்கனவு ஆரம்பத்திலேயே தடுமாறியது.

யார் இந்த ஷாஹீன் அப்ரிடி?

இதுவரை 60 போட்டிகளில் விளையாடி, அதில் 20 போட்டிகளில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திவிடும் இந்த இடதுகை வேகப்புயல் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் லாண்டி கோட்டலில் ஏப்ரல் 6, 2000 இல் பிறந்தவர்.

கைபர் பக்துன்க்வாவின் கரடுமுரடான மற்றும் கடுமையான நிலப்பரப்பில் தனது பெரும்பாலான கிரிக்கெட்டை விளையாடிய ஷாஹீன், இந்தியாவின் இஷாந்த் சர்மாவை விட ஒரு அங்குலம் உயரம் (6 அடி 5 அங்குலம்) உயரமானவர். அவரின் உயரம் 6 அடி 6 அங்குலம். அது தான் அவரின் பலமும்கூட. ஷாஹீன் குடும்பத்தில் மொத்த ஏழு சகோதர்கள். ஏழு சகோதரர்களில் இளையவர் இவர்.

ஷாஹீனின் மூத்த சகோதரர் ரியாஸ் அப்ரிடி 2004ல் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். அவரை பின்பற்றி கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஷாஹீன் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்த 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.

2020ல் ஹாம்ப்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் இணைந்து டி-20 விளையாடிய ஷாஹீன் நான்கு பந்துகளில் ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் மட்டும் நான்கு ஓவர்கள் வீசி 6/19 என்ற விக்கெட்டுகள் வீழ்த்தினார். அன்று, ஷாஹீன் அப்ரிடி கராச்சி கிங்ஸுக்கு எதிராக லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும்போது 151 கிமீ வேகத்தில் பந்துவீசினார். இது அவரின் அதிகபட்ச வேகம்.

முன்னாள் ஆல்ரவுன்டர் ஷாஹித் அப்ரிடிக்கும், ஷாஹீன் அப்ரிடிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது அவரின் ஜெர்சி எண் 10 என்பதாகும். அதைவிட ஷாஹித் அப்ரிடியின் மகளை தான் ஷாஹீன் மணமுடிக்க இருக்கிறார். ஷாஹித் அப்ரிடியின் வருங்கால மருமகன் ஆகப் போகிறார். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த ஒற்றுமையை வைத்து, அஃப்ரிடியின் அற்புதமான இன்னிங்ஸிற்கு ஐசிசி இப்படியாக ட்வீட் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *