கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? WHO இயக்குனர் முக்கிய தகவல்!

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து WHO இயக்குனர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட்டாலும் நோய் பரவல் குறைந்தபாடில்லை.

அந்தவகையில் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓய்வு எடுத்த கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து WHO இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் WHO இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியது, கொரோனா முடிவுக்கு வருவது நம் கையில் தான் உள்ளது.

நமக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. பயனுள்ள பொது சுகாதார மற்றும் மருத்துவ கருவிகள் நம்மிடம் உள்ளன. ஆனால் உலகம் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

இதனால் தொற்று நோயின் முடிவு கொஞ்சம் தொலைவில் உள்ளது. ஒரு வாரத்தில் சுமார் 50,000 பேர் கொரோனாவால் இறக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *