திருமணத்திற்கு விருந்தினர்களை பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!

தமிழர் கலாச்சாரத்தின் படி திருமணத்திற்கு சொந்த பந்தங்கள் புடைசூழ திருமணம் நடைபெறவேண்டும் என்பது வழக்கம்.

ஆனால் தென் கொரியா நாட்டில் மட்டும் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்க பணம் செலுத்த வேண்டும்.

மக்கள் தங்கள் சமூக நிலையை அனைவருக்கும் முன்னால் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பல ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. திருமணத்திற்கு விருந்தினர்களை ஏற்பாடு செய்துக் கொடுக்கும் நிறுவனங்கள் உண்டு.

அதற்கு திருமணம் செய்துக் கொள்பவர்கள், தென் கொரியாவில் பணம் செலுத்த வேண்டும். திருமண விருந்தில் அதிகமானவர்கள் கலந்துக் கொள்வது சமூகத்தில் பெருமையை கொடுக்கும் என்பதற்காக, அதிகமான விருந்தினர்கள் கல்யாணத்தில் கலந்துக் கொள்வதாக கணக்குக் காட்ட மக்கள் வாடகைக்கு ஆட்களை அழைக்கிறார்கள்.

அந்த விருந்தினர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், நன்றாக அலங்கரித்துக் கொண்டு, திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காகத் தான். அவர்கள் மொய்ப் பணம் கொடுக்க வேண்டாம்.

திருமணத்தில் கலந்து கொண்ட பணிக்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும்.

குளோபல் நியூஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, தென் கொரியாவில் திருமண விருந்தினர்களை நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த ஏஜென்சிகள் மூலம் வரும் விருந்தினர்கள், மிகவும் பண்பாக நடந்துக் கொள்ள பயிற்சி பெற்ற விருந்தினர்கள்.

திருமணத்தில் கலந்துக் கொள்ளும் அவர்கள், திருமணமாகும் தம்பதிகளின் குடும்பத்தின் மிக நெருங்கிய உறவினர்கள் போல் ஆசையுடனும் பாசத்துடனும் தோற்றமளிப்பார்கள். ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ள போலி விருந்தினர் ஒருவருக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் $ 20  ஆகும். இந்த தகவல் நம் தமிழர்களுக்கு சற்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *