குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க தடை!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.

இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது.

ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக சிறு குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளார்கள்.

அவர்கள் விளையாடுவதற்கு, மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு போதிய நேரம் இல்லை. இதுசம்பந்தமாக பெற்றோர்கள் அரசிடம் முறையிட்டனர்.

இதுபற்றிய விவரங்களை அரசு ஆலோசித்து இருக்கிறது. அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. இப்போது வீட்டுப்பாடமும் இரத்து செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *