வயதானாலும் இளமை தோற்றத்தில் ஜொலிக்கும் குஷ்பு!

நடிகை குஷ்பு-விற்கு மட்டும் வயசு அதிகரிக்க அதிகரிக்க, இளமை திரும்பி கொண்டே செல்கிறது, என்று சொல்லும் அளவிற்கு யங் லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த வகையில் தற்போது குஷ்பு லண்டனை சுற்றி வரும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை குஷ்பு. 51 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல் பளபளக்கும் அழகில் ஜொலித்து வருகிறார்.

தன்னுடைய இளமையான அழகிற்கு காரணம், உடல் பயிற்சி மற்றும் மனதை மிகவும் சந்தோஷமாக வைத்து கொள்வது என கூறி வருகிறார்.

வெள்ளித்திரை, சின்னத்திரையில், அரசியல் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் எப்போதும் முகம் நிறைய புன்னகையோடு தான் எப்போதும் காட்சியளிப்பார்.

அதே போல் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையும் அவர் ஒருபோதும் தவிர்த்தது இல்லை. இதனை பல முறை அவர் நேர்காணல்களில் கூட கூறி இருக்கிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் தற்போது குஷ்பு லண்டனின் அழகை சுற்றி பார்க்கும் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விதவிதமான மாடர்ன் உடையில் லண்டன் அழகை பார்த்து ரசித்து வரும் புகைப்படங்களை குஷ்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.

பார்ப்பதற்கு 20 வயது ஹீரோயின் லுக்கில் இருக்கும் குஷ்பு லண்டலில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் என்பது அவரது புகைப்படங்களை பார்த்தாலே தெரிவிகிறது.

பொதுவாகவே பிரபலங்கள் தங்களது ஓய்வு நாட்களை இந்தியாவில் கழிப்பதை விட, வெளிநாடுகளில் மிகவும் சுதந்திரமாக கழிப்பதையே விரும்புகிறார்கள்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கூட தங்களுடைய படப்பிடிப்பு முடிந்த கையோடு ஏதேனும் வெளிநாட்டிற்கு சென்று தங்களுடைய குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்கள்.

அவர்களது பாணியில் தான் தற்போது நடிகை குஷ்புவும் வெளிநாட்டிற்கு சென்று தன்னுடைய ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.

குஷ்பு நீண்ட நாட்களுக்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *