மனைவியை கொலை செய்து ஓடும் விமானத்தில் இருந்து கடலில் வீசிய மருத்துவர்!

நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து விமானத்தில் இருந்து கடலில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரில் வசித்து வரும் Robert Bierenbaum பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி Gail Katz. திருமண வாழ்க்கை இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் விளைவாக அடிக்கடி இருவருக்குள் சண்டை வெடித்துள்ளது. இந்நிலையில் 1985ஆம் ஆண்டு ஒரு நாள் இருவருக்குள் வழக்கம் போல சண்டை நடந்துள்ளது.

இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற Robert Bierenbaum தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தனது சொந்த விமானத்தில் மனைவியின் சடலத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அட்லாண்டிக் கடலில் வீசியுள்ளார்.

தனது மேல் சந்தேகம் வராமல் இருக்க மனைவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்படியே சுமார் 15 வருடங்கள் நடித்து ஏமாற்றிய Robert Bierenbaumயிடம் சமீபத்தில் விசாரணை நடைபெற்றது.

அதில் தனது மனைவியை சொந்த விமானத்தில் இருந்து அட்லாண்டிக் கடலில் வீசியதை ஒப்புக்கொடுள்ளார். தனது மனைவியை கழுத்தை நெரித்து கொண்டதாகவும், தனது கோபத்தை கட்டுப்படுத்தும் வகை தெரியாத ஒரு மனிதராக தான் இருந்ததாகவும் தெரிவித்தார்.

மனைவியை கொன்ற குற்றத்திற்காக 2000 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பரோல் வேண்டுக்கோள் நிராகரிக்கப்பட்டது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *