சுற்றுலா சென்ற மூன்று பெண்கள் சுட்டுக் கொலை!

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒன்றி இந்தியா மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த பெண்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோவில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் Tulum நகரம் விளங்கி வருகிறது. இதனால் இங்கு வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சாலையோர உணவகத்திற்கு அருகே இரு கும்பலுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், திடீரென்று அந்த கும்பல் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் தாக்கியது.

இதில் உணவகத்தில் அமர்ந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது. அதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் San Jose என்பவர் உயிரிழந்தார்.

இவர் ஒரு travel blogger(தான் சுற்றுலா செல்லும் இடங்களைப் பற்றி பதிவிடுவது) எனவும், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த நகருக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த இரண்டு பேர் ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களைப் பற்றி எந்த ஒரு விவரமும் தெரியவில்லை என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதைப் பொருள் விற்பனைக்காக நடந்த மோதலில் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *