ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை!

லண்டனில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவுஸ்திரேலிய நடிகை உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரபல நடிகையான 40 வயது Melle Stewart கடந்த மே 24ம் திகதி ஆஸ்ட்ராசெகனகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

தமது கணவரும் நடிகருமான Ben Lewis என்பவருடன் லண்டனில் வசித்து வந்துள்ளார் Melle Stewart. ஆனால், இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஒருநாள் தூங்கி எழுந்தவர், தமது உடம்பின் வலது பக்கத்தில் விசித்திரமான ஒரு உணர்வை அனுபவித்துள்ளார்.

படுக்கையில் இருந்து எழுந்து வெளியே செல்ல முயன்ற அவர், மொத்தமாக சுருண்டு விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அவரது உடல் நிலை திடீரென்று கவலைக்கிடமானதாக கூறப்படுகிறது. அவரது வலப்பக்க உடல் மொத்தமாக ஸ்தம்பித்துப் போனதுடன், பேசும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது உயிரை காப்பாற்றும் நோக்கில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் போராடியுள்ளனர். மட்டுமின்றி, அவரது மூளையில் அழுத்தத்தைக் குறைக்க அவர் மண்டை ஓட்டின் பெரும் பகுதியை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட ரத்தக்கட்டி காரணமாகவே நடிகை Melle Stewart இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என கூறப்படுகிறது. சுமார் 3 வாரங்கள் மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டிருந்த நடிகை Melle Stewart, மொத்தம் 5 வாரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது பேசவும் நடக்கவும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார். 2022லும் அவர் மருத்துவமனை சிகிச்சையில் இருப்பார் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *