பாடசாலை செல்லும் மகன்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய் ஏன் தெரியுமா?

பிரித்தானியாவைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க தாய் தன்னுடைய ஐந்து மற்றும் ஆறு வயது மகன்களுக்கு இப்போது வரை தாய்ப்பால் கொடுப்பது பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் West Yorkshire-ல் உள்ள Wakefield-ஐ சேர்ந்தவர் Sheryl Wynne.

தற்போது 39 வயதாகும் இவர் தன்னுடைய மகன்களான Riley(6) மற்றும் Mylo(5) இருவருக்கும் பள்ளி செல்லும் முன் தாய்ப் பால் கொடுப்பது, இரவு தூங்கும் நேரத்தில் தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

இதை முற்றிலும் சாதரணமானது என்று கூறும் அவர், இதைப் பற்றி யார் என்ன கூறினாலும் நான் கவலைப்படபோவதில்லை. தாய்ப் பால் கொடுப்பதன் மூலம், தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை உறுதிபடுத்திக் கொள்வதாகவும், அவர்கள் முற்றிலும் தயாராகும் வரை நான் இதை நிறுத்தமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இதை நான் பெற்றோருக்கான ஒரு அழகான கருவி என்று கூறுவேன்.

ஏனெனில் இதன் மூலம் நாம் குழந்தையை அமைதிப்படுத்த முடியும், அவர்கள் அழுகும் போதோ அல்லது நோய்வாய்படும் போதோ இந்த தாய்ப் பால் அவர்களுக்கு ஒரு ஆறுதலை கொடுக்கிறது.

Riley-வுக்கு மூன்று வயது இருந்த போது, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் அவன் இதை விரும்புகிறான், அவனிடம் இது குறித்து விளையாட்டாக கேட்டால் 10 வயது வரை நிறுத்தமாட்டேன் என்று கூறுகிறான்.

நான் இது பற்றி யோசிக்கிறேன். இருப்பினும் இது உயிரியல்ரீதியாக தன்னைப் பொறுத்தவரை சாதரணமானது, தேவையில்லாம திடீரென்று நிறுத்துவது சரியில்லை என்று நினைத்தேன்.

இதன் மூலம் அவர்கள் என்னுடனே எப்போதும் இருப்பார்கள். இது எங்களுக்குள் இருக்கும் பாசத்தை நெருக்கமாக்குகிறது. அவர்களுக்கு எப்போதும் நான் ஒரு அம்மாவாக ஆறுதல் கொடுப்பேன் என்பதை உணர்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுக்காமலும் அதை செய்ய முடியும். இருப்பினும் இது உங்கள் உறவின் ஒரு பகுதியாக உருவானது.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து இதற்கு சில எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும், நான் இதை என் இரு மகன்களை இணைப்பதற்கான ஒரு வழியாக பார்க்கிறேன்.

இதன் மூலம் நான் தாய்ப்பால் கொடுக்காத போது கூட அவர்கள் என்னுடனே இருக்க விரும்புகிறார்கள். இதனால் நான் உண்மையிலே மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன். நாங்கள் வெளியில் எங்காவது சென்றால், அவர்கள் தாய்ப்பால் கேட்கமாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு மற்றவர்கள் பார்ப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு தாய் மற்றும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசம். நான் என் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒரு அதிர்ச்சிகரமானனது, அதை கூற விரும்பவில்லை,

இதனால் நான் தோல்வியடைந்ததாகவும், அதை சரியாக செய்யவில்லையோ என்று உணர்ந்தேன். ஆனால், அதை சரி செய்வதற்கு எனக்கு தாய்ப்பால் உறவு கிடைத்துள்ளது என்று கூறி முடித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *