வீட்டிலிருந்தபடியே 10 மாதத்தில் 20 லட்சம் சேமித்த தம்பதி!

கொரோன வைரஸ் வந்ததில் இருந்தே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொருளாதர ரீதியாக பலரும் அவதிப்பட்டு மீண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, முதலீடு செய்வதில் பலரும் ஆர்வம் காட்டிய வருகின்றனர். பாதுகாப்பான முதலீடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்களில் மக்களின் கவனம் அதிக அளவில் திரும்பியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பிரிட்டிஷை சேர்ந்த தம்பதிகள் ஒருவர் 10 மாதங்களில் 20 லட்சம் ரூபாய் சேமித்தாக தெரிவித்தனர். அதனை எப்படி சாத்தியப்படுத்தினோம்? என்ற டிப்ஸையும் அவர்கள் விளக்கி இருக்கின்றனர்.

வீடியோ மூலம் பேசிய அவர் கண்மூடித்தனமான செலவுகளை எப்பொழுதும் செய்து வந்ததாகவும், அதனால், ஒரு யூஸ் இல்லாத பொருட்களை வாங்கி சேர்ப்பதை விட விலை குறைவான, குவாலிடியான பொருட்களை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.

மேலும், கடந்த 10 மாதங்களில் அவர்கள் கடைபிடித்த இந்த கொள்கையால் இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாயை இருவரும் சேமித்துள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் கொடுத்துள்ள முதல் டிப்ஸ், மலிவான விலையில் தரமான பொருட்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும், பிராண்ட்டான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்ததாக, விலையுயர்ந்த கஃபேக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தும் அப்பி, உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் செலவிடுவது தேவையற்றது என விளக்கமளித்துள்ளார்.

வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு பொருளுக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தையும், அதற்காக நீங்கள் உழைக்க வேண்டிய நேரத்தையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை, ஒரு லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *