WhatsAppபில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்ப்பது எப்படி?

‘வாட்ஸ்அப்’ செயலி உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான செயலி ஆகும்.

வாட்ஸ்அப் செயலி தொடர்ந்து பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது.

வீடியோ கால் பேசும் வசதி முதல் UPI மூலமாக பணம் வேறொருவருக்கு அனுப்பும் வசதி வரை தொடர்ந்து அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.

வாட்ஸ்அப்பில் ‘மெசேஜ் டெலீட்’ (Delete for Everyone) என்ற அம்சம் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அழிக்க முடியும். நாம் அனுப்பிய செய்தி நமக்கு மட்டுமில்லாமல், அதை பார்ப்பவர்களுக்கும் சேர்த்து அழிக்கிறது.

இந்த வசதியை நீங்களும் பயன்படுத்தி இருப்பீர்கள். வாட்ஸ்அப் மெசேஜை தவறாக ஒருவருக்கு அனுப்பி இருந்தால், மற்றவர்கள் அதனை படிப்பதற்குள் உடனே அதனை டெலிட் செய்து கொள்ளலாம்.

இப்படி டெலிட் செய்யப்பட்ட மெசேஜை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? என்றால் முடியும். ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாட்ஸ்அப் யூசர்கள் தனியாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட செய்திகளை படிக்க முடியும்.

இதே போல ஆப்பிள் யூசர்கள்களுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. ஆண்ட்ராய்டில் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை எப்படி பார்ப்பது என்று இதில் பார்க்கலாம்.

முதலில் கூகுள் ‘பிளே ஸ்டோர்’ செல்ல வேண்டும். அங்கு சேர்ச் பாரில் “WhatsApp deleted Messages” என்று பதிவிட வேண்டும்.

அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு செயலியின் உள்ளே சென்று கேட்கும் Permission தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

“Delete for Everyone” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதனை தேர்வு செய்து நீங்கள் வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பெறலாம்.

WAMR, WhatsRemoved+ போன்ற செயலிகளை தயவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளாதீர்கள்.

இது முற்றிலும் போலியான செயலிகள் ஆகும். ஆப்பிள் நிறுவனம் தங்களது யூசர்களை வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க அனுமதிப்பதில்லை.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இதுபோன்ற பயன்பாட்டுக்கென ஆப்ஸ்களை ‘ஆப்பிள்’ (iOS)தடை செய்துள்ளது. எனவே உங்களால் எந்த ஒரு ஆப்-பையும் பயன்படுத்தி டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை உங்களால் படிக்க முடியும்.

ஆனால் ஒரு ட்ரிக்கை பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பலர் நோட்டிபிகேஷன் (Notification) ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பார்கள்.

முதலில் இதனை ஆன் (On) செய்ய வேண்டும். யாராவது உங்களுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினால் முதலில் உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலமாக தெரிவிக்கப்படும். அதாவது உங்கள் நோட்டிபிகேஷன் பேனலிலேயே உங்களுக்கு அனுப்பும் மெசேஜை உங்களால் படிக்க முடியும்.

ஒருவேளை அவர்கள் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்தாலும் கூட, அவர்கள் அந்த மெசேஜை டெலீட் செய்வதற்கு முன்னர் நீங்கள் இந்த நோட்டிபிகேஷனில் பார்த்து முடியும்.

ஆப்பிள் யூசர்கள் இந்த முறையை தவிர, வேறு எந்த முறையிலும் டெலிட் செய்த மெசேஜ்களை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *