65 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 25 வயது பெண்!

கர்நாடகாவில் 65 வயது முதியவரை 25 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தின் சந்தேமவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகனா(25). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு ஆண்டில் மேகனாவின் கணவர்  மாயமாகியுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் மேகனா 2 ஆண்டு காலமாக தனியாக வசித்து வந்துள்ளார்.

அதே சமயம் சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா என்ற நபருடன்  பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக  மலர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று( அக்.19) சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற்றது.  இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மோகனா தனது திருமண புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் தங்களது ஆதாராவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம்  சமூக வலைதள பக்கத்தில்  வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *