உலகில் அதிக எடை கொண்ட மனிதன் இறுதியில் நடந்த துயரம்!

குவாமை சேர்ந்த உலகின் மிகப் பெரிய அதிக எடை கொண்ட நபரின் வாழ்க்கைப் பற்றி ஆவணப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க தீவுப் பகுதியான Guam-ஐ சேர்ந்தவர் Ricky Naputi.

400 கிலோ எடை கொண்ட இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இவருடைய வாழ்க்கை குறித்து TLC ஆவணப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு 900பவுண்டு(408 கிலோ எடை) மனிதன் என்று பெயரிட்டுள்ளனர்.

சாதரண பையன் போன்று தான் இருந்து வந்த Ricky Naputi, நாட்கள் செல்ல, செல்ல வாலிபனாக மாறிய போது அவரது எடை 200 பவுண்டாக(90 கிலோ எடை) உயர்ந்தது.

இது குறித்து அவருடைய சகோதரி Tammy கூறுகையில், எங்கள் அம்மா நன்றாக சமைப்பார்.உணவின் மூலம் அவருடைய பாசத்தை காட்டி வந்தார். அவனும் நன்றாக சாப்பிடுவான்.

அவன் பள்ளி சென்ற காலத்தில் சிலர் அவனது எடையை வைத்து கிண்டல் செய்வர். இது அவனுக்கு வெறுப்பை தந்தது. இதனால் அவன் தன்னுடைய 20 வயதில் பெரும் மன அழுத்ததிற்கு ஆளானான்.

அதன் பின் ஒரு நைட் கிளப்பில் பவுன்சராக சேர்ந்தான். அதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக போதைபொருட்களை பயன்படுத்தி வந்தான். 30 வயதில் அவனுடைய எடை 35S(222 கிலோ)-ஐ தொட்டது. 2004-ஆம் ஆண்டு அவன் Cheryl என்ற பெண்ணை முதன் முதலில் சந்தித்தான்.

அதன் பின் அவரை காதலித்தான். அந்த நேரத்தில் அவனுடைய எடை 700 பவுண்ட்(317 கிலோ)-வாக இருந்தது.

இந்த காதல் குறித்து Cheryl ஆவணப்படத்தில் கூறுகையில், நானும் அவரும் ஒன்றாக இருந்தோம்.

அப்போதே அவர் அதிக எடை கொண்ட நபராக இருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். ஆனால், அவர் எடை கொண்டவராக இருந்ததால், அவரால் திருமணத்தை கூட சரியாக முடிக்கவில்லை. நாங்கள் ஒரு அழகான குழந்தை பெற்று குடும்பத்தை தொடங்க ஆசைப்பட்டோம்.

ஆனால், அவரின் எடையோ தொடர்ந்து அதிகரித்தே சென்றது. இறுதியில், அவரால் எழுந்து நடக்க கூட முடியாத அளவிற்கு மாறினார். இதனால் அவர் வீட்டிலே படுக்கை படுக்கையாக கிடந்தார்.

அதன் பின் நான் அவருக்கு ஒரு பராமரிப்பாளராக மாறினேன். அவரை ஒரு குழந்தை போன்று கவனித்தேன். எனக்கு அவர் குழந்தை போன்று தான் தெரிந்தார். அவர் தான் எனக்கு உலகம் போன்று தெரிந்தது.

Guam, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் அனைவரும் அவரின் எடையை குறைக்க முயன்றனர். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் போதுமான அளவு எடையை குறைக்க வேண்டும்.

ஆனால் அது அவரால் முடியாத காரணத்தினால் இது தோல்வியில் முடிந்தது. இறுதியாக இந்த உடல் எடை அதிகரிப்பு அவரை கொன்றுவிட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் திகதி 39 வயதில் அவர் உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு முக்கிய காரணம் உணவு பழக்கம் என்று கூறப்படுகிறது. அவரால் உணவுப் பழக்கத்தை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *