இனி மருந்து கிடைகளில் கஞ்சா கிடைக்கும் புதிய அரசாங்கத்தின் புது திட்டம்!

ஜேர்மனியில் அமையவுள்ள புதிய அரசாங்கம் நாட்டின் கடுமையான கஞ்சா சட்டங்களை தளர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக ஜனநாயகவாதிகள் கட்சி (SPD), பசுமைவாதிகள் (Greens) மற்றும் வணிக சார்பு சுதந்திர ஜனநாயகக் கட்சியினர் (FDP) அடுத்த ஜேர்மன் அரசாங்கமாக மாறும் முயற்சியில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

போதைப்பொருல் கொள்கையை பொறுத்தவரை, இந்த மூன்று கட்சிகளும் தங்கள் நிலைகளில் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

எனவே இந்த கூட்டாட்சி அரசாங்கம் அமைந்தவுடன் நாட்டில் கஞ்சா பயன்பாட்டை குற்றமற்ற செயலாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், கஞ்சாவை எங்கு, எந்த அளவிற்கு அணுக முடியும் என்ற கேள்விக்கு கட்சிகள் இன்னும் ஒரு பொதுவான நிலைக்கு வரவில்லை.

FDP கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் லிண்ட்னர் (Christian Lindner), இப்போது ஹஷிஷ் (hashish) போன்ற கஞ்சா தயாரிப்புகளை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விற்க அனுமதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

லிண்ட்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் நாளிதழ் ஒன்றில் நேரடி ஒளிபரப்பில் பேசியபோது, நுகர்வோர் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை மருந்தகங்களில் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

நெதர்லாந்தைப் போல், “காபி ஷாப்”களில் விற்பனை செய்யாமல், “நான் கட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்திற்கு ஆதரவாக இருக்கிறேன், எனவே மக்களுக்கு அதற்கேற்ற சுகாதாரக் கல்வியை கொடுக்க வேண்டும்” என்று லிண்ட்னர் கூறினார்.

லிண்ட்னர் தனது முக்கிய குறிக்கோள் “குற்றம் மற்றும் சுகாதார தடுப்பு” பற்றியது, “போதைக்கான உரிமையை சட்டப்பூர்வமாக்குவது” அல்ல என்று கூறினார்.

அதேபோல் ஜேர்மனியின் பசுமைக் கட்சியும், உரிமம் பெற்ற கடைகளையும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான ஒரு புதிய அணுகுமுறையையும், கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்பூர்வமாக்கலுடன் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

SPD-யும் ஜேர்மனியின் போதைப்பொருள் தடை நிலைப்பாட்டில் சீர்திருத்தத்தை விரும்புகிறது. ஆனால் சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தை பொறுத்தவரை மற்ற இரு காட்சிகளையும் விட மிகவும் எச்சரிக்கையாக அணுகுகிறது. SPD ஆரம்பத்தில் பைலட் திட்டங்களை அமைக்க விரும்புகிறது.

நெதர்லாந்தில் உள்ள மக்கள், அந்நாட்டின் ‘tolerant drugs policy’ கொள்கையின் கீழ் காபி கடைகளில் கஞ்சா பொருட்களை அணுகலாம். எனினும் காபி கடைகள் சில கண்டிப்பான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஒரு தனிநபருக்கு பெரிய அளவில் விற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *