மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கனவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

பிரித்தானியாவில் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாகடிய கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் Leicester-ல் உள்ள Wintersdale பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Kashish Aggarwal என்பவர் தன்னுடைய மனைவி Geetika Goyal-உடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு, நாடகமாடியது அம்பலமானதால், Leicestershire Crown நீதிமன்றம் நேற்று அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பரோல் பெற வேண்டும் என்றால் கூட 20 ஆண்டுகள் 6 மாதத்திற்கு பின்பு தான் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினமான கடந்த மார்ச் மாதம் 3-ஆம் திகதி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய Kashish Aggarwal, தான் வீட்டிற்கு திரும்பியதில் இருந்தே மனைவியை காணவில்லை என்று மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி பொலிசில் புகார் கொடுக்க, அதன் பின் பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போது, மார்ச் 4-ஆம் திகதி Uppingham Close பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது, அது காணமல் போனதாக தேடப்படும் Geetika Goyal என்பது உறுதியானது. இந்த விசாரணையில் பொலிசார் இவரின் கணவரை தான் ஒரு சாட்சியாளராக வைத்திருந்தனர்.

ஆனால் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் விழவே, பொலிசார் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இது குறித்து உண்மை தெரிந்து கொள்ள, இந்த தம்பதி தங்கியிருந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, இந்த கொலையை செய்தது Kashish Aggarwal தான் என்பது உறுதியானது.

ஏனெனில், அன்றைய தினம மனைவியை பல முறை கத்தியால் குத்தி  கொன்றுவிட்டு, அதன் பின் சடலத்தை ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்றில் மறைத்து வைத்து, உடனடியாக காரில் அந்த சடலத்தை எடுத்துக் கொண்டு சென்று, Uppingham Close பகுதியில் போட்டுவிட்டு வந்துள்ளார்.

இவை அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது. பொலிசார் வீட்டில் சென்று சோதனை மேற்கொண்ட போது, தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று Leicestershire Crown நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், Kashish Aggarwal குற்றவாளி என்பது நிரூபனமாகியுள்ளதால், அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

விசாரணையின் தீர்ப்பு துரதிருஷ்டவசமாக Geetika Goyal-ஐ திருப்பித் தராது. இருப்பினும் இதற்கு காரணமாக நபர் தண்டிக்கப்பட்டுள்ளார், நீதி கிடைத்துள்ளது, இது அவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும் என்று நம்புவதாக துப்பறியும் ஆய்வாளர் Jenni Heggs கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *