பெண் ஊழியரிடம் முறையற்று நடந்து கொண்ட பில் கேட்ஸ் வெளியான அதிர்ச்சி தகவல்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன் சக பெண் ஊழியரிடம் முறையற்று நடந்துகொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

2007-ஆம் ஆண்டில், பில் கேட்ஸ் மைக்ரோசாப்டில் ஊழியராகவும் மற்றும் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். அந்த சமயத்தில், கேட்ஸ் ஒரு நடுத்தர பெண் ஊழியருடன் மின்னஞ்சல் மூலம் உல்லாசமாக இருந்தார் மற்றும் அப்பெண்ணை வேலைக்கு பிறகு வெளியே ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு இந்த மின்னஞ்சல்களைப் பற்றி நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் குழு நிர்வாகிகள் பில் கேட்ஸிடம் இதுபோன்ற செயல்கள் முறையற்றது என்றும் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

Wall Street பத்திரிக்கையின் படி, பில் கேட்ஸ் அப்போது அந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த தொடர்புகள் குறித்து வாரியம் அறிந்திருந்த போதும் பில் கேட்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து மைக்ரோசாப்ட் பிரதிநிதி ஒருவர் “மைக்ரோசாப்ட் நிறுவனம் WSJ கட்டுரையின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதைத் தவிர வேறு எதையும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்ள முடியாது” என்று நேற்று (திங்களன்று) கூறினார்.

பில் கேட்ஸ் 2008-ல் மைக்ரோசாப்டின் தலைவர் பதவியில் இருந்து விலகினார், இருப்பினும் அவர் மார்ச் 2020 வரை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது 27 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இந்த மே மாதத்தில் விவாகரத்து செய்தார்.

தகவல்களின்படி, பில் கேட்ஸ் திருமணமான பிறகும் சக பெண் ஊழியரிடம் முறையற்று (Flirty) நடந்துகொண்டதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *