இரண்டு திருமணம் செய்துகொள்ளாத ஆண்களுக்கு சிறை!

ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ,எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது.

அதனால் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவ்வாறு திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுமெனவும், அத்துடன் முதல் மனைவி அவரது கணவரின் 2ஆவது திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *