IPL கிண்ணத்தை வென்ற சென்னை அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை!

கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் கோப்பை வென்றதன் மூலம் சென்னை அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது போன்ற விபரம் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நான்காவது முறையாக ஐபிஎல் வரலாற்றில் கோப்பையைக் கைப்பற்றி சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் வென்ற சென்னை அணிக்கு முதல் பரிசாக 20 கோடி ரூபாய்க்கான பரிசுத் தொகையை, பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சென்னை அணியின் கேப்டன் ஆன டோனியிடம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்த கொல்கத்தா அணிக்கு பரிசுத் தொகையாக 12.5 கோடி ரூபாயும், மூன்றாவது இடத்தைப் பிடித்த டெல்லி மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த பெங்களூரு என இரு அணிகளுக்குமே 8.75 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது.

அதே போன்று இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த(17 போட்டிகளில் 635 ஓட்டங்கள்) சென்னை அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான விருதும், பவுலிங்கில் கலக்கிய பெங்களூரு அணி வீரர் ஹர்ஷர் பட்டேலுக்கு(15 போட்டிகளில் 32 விக்கெட்) 10 லட்சம் மற்றும் விருதும் கொடுக்கப்பட்டது.

மேலும், Emerging player of the season,ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கும், Vivo Perfect catch of the season-க்கு பஞ்சாப் அணியைச் சேர்ந்த Ravi Bishnoi-க்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் விருதும், Super Striker of the season-ஆக டெல்லி அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் Shimron Hetmyer தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 10 லட்சம் ரூபாயும், Dream11 Game changer of the season விருதை, பெங்களூரு அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் ஹர்ஷர் பட்டேலுக்கும்(10 லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி Let’s crack It sixes விருதையும், அதற்கான 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் வென்றார்.

Power player of the season விருது கொல்கத்தா அணியின் துவக்க வீரர் வெங்கடேஷ் அய்யருக்கு(10 லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டது. இறுதியாக Fair Play(ஒழுக்கமாக விளையாடிய அணி) விருது ராஜஸ்தான் அணிக்கும், Most Valuable Asset of the season விருது பெங்களூரு பவுலர் ஹர்சர் பட்டேலுக்கும் கொடுக்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *