முதியோர் இல்லத்தில் இருந்த அம்மா கிட்னியை விற்று மகனுக்கு 2 இலட்சம் கொடுத்த சம்பவம்!

இன்று நமக்கு பாரமாக இருக்கின்றனர் என்று வீட்டில் இருக்கும் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்து விட்டுவிடுகின்றனர். அவ்வாறு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட தாய் செய்த கடைசி தியாகத்தின் வலியான பதிவே இதுவாகும்.

நபர் ஒருவர் தனது தாயை முதியோர் இல்லத்தில் அனுமதித்துள்ளார். அங்கிருந்து போன் வந்துள்ளது. மனைவி எடுத்துள்ளார். உடனே கணவரிடம் உங்க அம்மாவை சேர்த்த முதியோர் இல்லத்தில் இருந்து பேசினார்கள்… நாளை உங்களை வரக் கோரினார்கள் என்று கூறிய மனைவியிடம் இப்போது தானே சென்றுவிட்டு வந்தேன் என்னவாம் என்று கேட்டுள்ளார்.

பின்பு மனைவி கூறிய பதில் கணவனை மனவலியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு சென்று பார்த்துட்டு வாங்க.. கூட்டிட்டு வந்திடாதீங்க! ஏற்கனவே அதிகமான செலவு இருக்குது… இதுக்கு இடையில அவங்களை பார்க்கமுடியாது…. நம்ம பொண்ணு படிப்பு செலவே விழிபிதுங்குது என்று புலம்பிய மனைவியிடம் சரி சரி விடு என்று கணவர் பதிலளித்தார்.

ஆனால் அவ்வாறு பதில் அளித்த கணவரிடம், மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் காலை அம்மாவை பார்க்க’முதியோர் இல்லம்’ சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க, அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் ஒரு கவரை கொடுத்துள்ளார்.

அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு ‘2 இலட்ச ரூபாய்க்கான காசோலையும்’, ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தினை படித்த மகன் அதிர்ந்து போனார்.

அக்கடிதத்தில், அதில் அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது ‘உன்னை நான் சுமையாக’ அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் ‘உடல் உழைப்பை தர முடியவில்லை.

மேலும் நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. ஆகவே இப்போதும் எனது “சிறுநீரகத்தினை” விற்று அந்தப் பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.

கடனையெல்லாம் அடைத்து விட்டு என் ‘பேத்தியை’ நன்கு படிக்க வை..! அவள் நாளை ‘உன்னை உன் மனைவியை’ காப்பாத்துவாள்… எல்லோரையும் பார்த்துக் கொள்… நீங்க எல்லாரும் நல்லா இருப்பதற்கு நான் கடவுளிடம் வேண்க்கொள்கிறேன்… நான் போகிறேன்… இப்படிக்கு அன்பு அம்மா.. என்று எழுதியிருந்ததை படித்த அந்த நபர் இடிந்து போய்விட்டார். இதனை நினைத்து இன்றும் அழுதுகொண்டிருக்கும் நபரின் நண்பர் வெளியிட்ட பதிவே இதுவாகும்.

நீதி: ‘அன்பு’ என்பது அன்னையிடம் மட்டுமே எல்லா காலங்களிலும் அமுதமாய் கிடைக்கும். தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *