உலகில் மிகவும் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல் வெளியீடு!

உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் 2021-ஆம் ஆண்டிற்கான பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் பாதுகாப்புமிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index வெளியிட்டு வருகிறது.

குறித்த நிறுவனம், இதை ஆய்வு செய்தே, அதன் பின்னர் தன்னுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகிறது.

அதன் படி Global Peace Index பட்டியலில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் எவ்வளவு ஆபத்தானது என்பதை தீர்மானிக்க 23 வெவ்வேறு காரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமாக அந்த நாடுகளில் நடந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு மோதல், சமூக பாதுகாப்பு,  இராணுவமயமாக்கல் போன்றவை அடங்கும்.

அதுமட்டுமின்றி உள் மற்றும் வெளிப்புற வன்முறை மோதல்களின் எண்ணிக்கை, அவநம்பிக்கை நிலை, அரசியல் உறுதியற்ற தன்மை, பயங்கரவாத செயல்களுக்கு சாத்தியம்,   கொலைகளின் எண்ணிக்கை, இராணுவ செலவுகள் ஆகியவையும் இதில் கணக்கிடப்படும்.

அதன் படி பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில்,  ஐரோப்பிய நாடுகளே அதிகம் உள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு குறையாத ஒரே கண்டமாக ஐரோப்பா உள்ளது.

குறிப்பாக ஐரோப்பாவின் நோர்டிக் நாடுளான, நோர்வே, ஸ்வீடன் டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களில் உள்ளது.

இந்த நாடுகளில் கொலை விகிதம் 100,000-பேரில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே பதிவாகியுள்ளது,

இதன் காரணமாகவே டாப் 10 இடத்தில் இருக்கும் நாடுகள் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதில் முதல் இடத்தில் ஐஸ்லாந்து, அடுத்த இடத்தில் டென்மார், மூன்றாவது இடத்தை நியூசிலாந்தும் பிடித்துள்ளது,

பிரித்தானியா 41-வது இடத்திலும், பிரான்ஸ் 47-வது இடத்திலும், கனடா 12-வது இடத்திலும், ஜேர்மனி 23-வது இடத்திலும், இலங்கை 145-வது இடத்திலும், இந்தியா 144-வது இடத்திலும் உள்ளது.

உலகில் பாதுகாப்பு/மகிழ்ச்சியான டாப் 10 நாடுகளின் பட்டியல்

Iceland
Denmark
New Zealand
Norway
Austria
Slovenia
Jappan
Quatar
Finland
Australia 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *