தாயின் மூன்றாவது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 2 பிள்ளைகள்!

முல்லைத்தீவு – வட்டுவாகலில் தாயின் 3வது கணவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 2 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீது துஸ்பிரயோகம் நடப்பதாக கிராம மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் கடந்த 12ம் திகதி தாய் மற்றும் தாயின் 3வது கணவனையும் கைது செய்திருக்கின்றனர்.

பெண் இரு திருமணங்கள் முடித்ததுடன் அதில் இரு பெண் பிள்ளைகளை பெற்ற நிலையில் அச் சிறுமிகள் மீதே மூன்றாவது கணவனால் துஸ்பிரயோசம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளனர். மேலும் கைதானவர்களிடன் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25ம் திகதிவரை சந்தேகநபர்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *