உலக பட்டினிக் குறியீட்டில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது!

2021ம் ஆண்டுக்கான உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான பட்டியல் வெளியாகிள்ள நிலையில், இலங்கைக்கு 65வது இடம் கிடைத்துள்ளது.

ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான அறிக்கைக்கு, 135 நாடுகளின் தரவு மதிப்பீடு செய்யப்பட்டது.

இவற்றில், 116 நாடுகளுக்கான 2021 பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான மதிப்பெண்களைக் கணக்கிட மற்றும் தரவரிசைப்படுத்த போதுமான தரவு இருந்தது (ஒப்பிடுகையில், 107 நாடுகள் 2020 அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன).

19 நாடுகளுக்கு, தரவு இல்லாததால் தனிப்பட்ட மதிப்பெண்களைக் கணக்கிட முடியவில்லை மற்றும் தரவரிசைகளைத் தீர்மானிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில், மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இலங்கைக்கு 65வது கிடைத்துள்ளது.

2000ம் ஆண்டில் இலங்கை சனத்தொகையில் 21.9% ஆனவர்கள் பட்டினிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலை தீவிரமானதாக கருதப்பட்டது.

இருப்பினும் தற்போது இலங்கையில் பட்டினி விகிதம் -26.9% ஆக உள்ளது. இது இப்போது குறைந்த பட்டினி விகிதமாக கருதப்படுகிறது.

எனினும், அண்டைய நாடுகளான இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தை என்பன பின் தங்கியுள்ளன.

இதேவேளை, சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *