பன்டோரா தொடர்பில் இலங்கையர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்!

தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மீது மட்டுமல்லாமல் பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், அமைப்பின் தலைவர் முருந்தெட்டுவே ஆனந்த தேரர், பன்டோரா பேப்பரில் 93 இலங்கையர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. 2016 இல் பனாமா ஆவணங்கள் சட்டவிரோத சொத்துக்களை குவித்த 65 இலங்கையர்களை அம்பலப்படுத்தியது. எனினும், திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மட்டுமே லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.

எனவே தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் என்ற அடிப்படையில் பண்டோரா மற்றும் பனாமா ஆவணங்களில் பெயரிடப்பட்ட அனைவர் மீதும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமென ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணையின் பின் சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மோசடி மற்றும் ஊழல் மூலம் சொத்துக்களை தவறாக சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *